சனி, 13 ஏப்ரல், 2019

Watermelon Cultivation: தர்பூசணி வகைகளும், பயிரிடும் முறையும்

ப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பிரதேசத்தில் தோன்றிய இப்பயிர் உலகின் வெப்ப மண்டலத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. நன்கு முற்றிப் பழுத்த பழங்களின் சதைப்பகுதி                                  இனிமையான சுவையுடனும், அதிக சாறுடனும் இருக்கும். பாலைவனப் பகுதிகளில் தாகத்தை அடக்கும் முக்கிய பழமாக இது பயன்படுகிறது. பூசணி இனப் பயிர்களிலேயே இப்பழத்தில்தான் இரும்புச்சத்து மிக அதிகமாக இருக்கிறது.
மண்வளத் தேவை மற்றும் தட்ப வெப்ப நிலை
அதிக வெப்பத்துடன் காற்றில் ஈரத் தன்மை குறைவாயும், நல்ல சூரிய வெளிச்சத்துடனும் உள்ள தட்ப வெப்பநிலை, இந்தப் பயிர் செய்ய ஏற்றது. குறைந்த வெப்ப நிலையில் விதைகள் முளைப்பு குறைவாக இருக்கும். காய்கள் முதிர்ச்சியடையும் பருவத் தில் அதிக வெப்பநிலை நிலவுவது பழங் களின் இனிப்புத் தன்மையை அதிகரிக்கும். பனி பெய்தால் பயிரின் வளர்ச்சி தடைப் படும்.
மணல் கலந்த இருமண்பாட்டு நிலம் மிகவும் உகந்தது. மண்ணின் கார – அமில நிலை 6.5-7.0 என்ற அளவில் இருப்பது மிகவும் நல்லது. இருப்பினும் அமிலத் தன்மை 5.0 என்ற அளவு வரையிலும் கூட இப்பயிர் தாங்கி வளரும். இறைவைப் பயிராகப் பயிர் செய்யப்பட்டாலும் குளங் களில் நீர் வற்றியவுடன் கிடைக்கும் ஈரத் தைக் கொண்டே இப்பயிரைப் பயிர் செய்யலாம்.
மேலும் படிக்க :  https://valar.in/

Waste Management: நல்ல லாபம் தரும் மறுசுழற்சிப் பொருட்கள் கடை


குன்றத்தூரை அடுத்த ஆண்டாள் குப்பத்தில் வசித்து வருகிறார் திருமதி. ஆர் சாந்தி. இவர் புதுப்பேடு என்னும் இடத்தில் ஆர்எஸ்ஆர் வேஸ்ட் ஸ்கிராப் மார்ட் கம்பனியை நடத்தி வருகிறார். அவரிடம் அவரின் தொழில் பற்றி கேட்டபோது,
எனக்கு முன் என் கணவர் இந்த தொழிலை செய்து வந்தார்.
அவர் அமரம்பேட்டில் சொந்தமாக கடை வைத்து இருந்தார். பத்து ஆண்டுகளாக இந்த தொழிலை செய்தார். தொழிலில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் அதிகமாகி விட்டது. என் கணவரும் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.
அதனால் சொந்த இடத்தை விற்க வேண்டிய தாயிற்று. இப்போது வாடகை இடத்தில் தான் கம்பனி வைத்து இருக்கிறேன். எனக்கு வேறு எந்த தொழிலும் செய்ய தெரியாததால் என் கணவர் பார்த்து வந்த இந்த தொழிலையே நானும் தேர்ந்தெடுத்தேன்.
மேலும் படிக்க: https://valar.in/

GST in Tamil: வணிகர்களுக்கான ஜிஎஸ்டி விளக்கத் தொடர்


குறைக்கப்பட்ட வீடுகளுக்கான ஜிஎஸ்டி
வீடு வாங்குபவர்களுக்கு சலுகை அளிக்கவும், வீட்டு வசதி துறையை உயர்த்தவும், ஜிஎஸ்டி கவுன்சிலின் 33வது கூட்டம் 24/02/2019 அன்று நடைபெற்றது அந்த நேரம் வீட்டு வசதிக்காக ஜிஎஸ்டி சதவீதம் குறைப்பு மற்றும் முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளது. அவை என்ன என்று பார்ப்போம்.
ஜிஎஸ்டி வரி விகிதம்
மலிவான பிரிவிற்கு வெளியே வாழும் குடியிருப்புகளுக்கு உள்ளீட்டு வரி வரவு இல்லாமல் 5% வரி விதிக்க வேண்டும். இது தற்பொழுது 12% உள்ளது.
அதேபோல் மலிவு விலை வீடுகளுக்கான வரி விகிதம் 8% இருந்து 1% ஆக குறைக்கப்பட உள்ளது. இதற்கு உள்ளீட்டு வரி வரவு கிடையாது. இந்த வரி விகிதங்கள் 01/04/2019 முதல் நடைமுறை படுத்தப்படும்.
மேலும் படிக்க: https://valar.in/

Event Management: முன்னேற வேண்டுமானால் ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும்!

ஒருவர் ஒரு பணியில் இருந்து கொண்டே வேறு ஒரு தொழிலில் பகுதி நேரமாக செயலாற்றி வெற்றி பெற முடியுமா? என்கிற கேள்விக்கு முடியும் என்று கூறுகிறார், நிகழ்ச்சி மேலாண்மையை (ஈவென்ட் மேனேஜ் மென்ட்) பகுதி நேரமாக செய்து வரும் திரு. சரவணன் சந்திரன்.
சமூக சேவகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்ட அவரை நமது வளர்தொழில் இதழுக்காக சந்தித்தோம். அவரிடம் கலந்துரையாடியதில் இருந்து.
‘’பிறந்தது தூத்துக்குடியில். பின் சிறுவயதிலேயே எனது தந்தையின் தொழி லுக்காக சென்னையில் குடியேறினோம். எனது தந்தை சென்னை, அண்ணாநகரில் உள்ள சிந்தாமணியில் சந்திரன் பேப்பர் மார்ட் என்கிற பழைய பேப்பர் வாங்கும் மறுசுழற்சிக் கடை நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க: https://valar.in

வியாழன், 15 செப்டம்பர், 2011

வளர்தொழில் விளம்பர கட்டண விவரம்

வளர்தொழில் விளம்பர கட்டண விவரம்
கருப்பு-வெள்ளை
முழுப்பக்கம் (23 *16cms) ரூ .12 ,000
அரைப்பக்கம் (11.5*16cms) ரூ. 6,500
கால் பக்கம் (11.5*8cms) ரூ . 3,500

வண்ணம்
பின் அட்டை (24*17cms) ரூ .25,000
உள் அட்டைகள் (24*17cms) ரூ. 22,000
முழுப்பக்கம் (23*16cms) ரூ. 18,000
அரைப்பக்கம் (11.5*16cms) ரூ. 10,000

விளம்பரங்களை வெளியிட தொடர்பு முகவரி :
வளர்தொழில் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
37, அசிஸ் முல்க் இரண்டாம் தெரு
ஆயிரம் விளக்கு
சென்னை 600 006
தொலை பேசி : 044 28292390
மின்னஞ்சல் :valarthozhil@gmail.com

வளர்தொழில் சந்தா விவரம்

ஒரு ஆண்டுக்கு ரூ .220
இரு ஆண்டுகளுக்கு ரூ.440
மூன்று ஆண்டுகளுக்கு ரூ .660
உரிய தொகைக்கு வளர்தொழில் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயருக்கு எடுக்கப்பட்ட வங்கி வரைவோலை அல்லது பணவிடை வாயிலாக அனுப்பி வைக்கலாம் . சந்தா பிரிவு முகவரி : சந்தா பிரிவு , வளர்தொழில், 39 , முதல் தெரு ,திருவள்ளுவர் தெரு, கோட்டுர்புரம்,
சென்னை 600085

வளர்தொழில் நோக்கம்

எந்த இதழாக இருந்தாலும் அந்த இதழுக்கு என ஒரு உள்நோக்கம் இருக்கும் . மற்ற தொழில்களைப்போல வெறும் பணத்துக்காக மட்டுமே யாரும் பொதுவாக இதழ்களை தொடங்கி நடத்துவதில்லை . தமிழ் நாளிதழ் உலகில் ஒரு புரட்சியை படைத்த ஆதித்தனார் ஆக இருந்தாலும் , சுவையான பருவ இதழ்களுக்கான இலக்கணம் வகுத்த எஸ் ஏ பி ஆக இருந்தாலும் அவர்களுக்கும் உள்நோக்கங்கள் இருந்தன . இவர்களைப்பற்றி மணிக்கணக்கில் , நாட்கணக்கில் பேசினாலும் தீராத அளவுக்கு செய்திகள் இருக்கின்றன .தமிழில் எல்லா விதமான இதழ்களும் இருந்தன . அரசியல் , பொழுதுபோக்கு , திரை , ஜோசியம், ஆன்மிகம் ,கதை என்று எண்ணற்ற இதழ்கள் இருந்தன . ஆனால் அவை நேரடியாக வாசகர்களின் தன்வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு பயன்பட்டன அல்லது பயன்படுகின்றன இன்ற கேள்வியை எழுப்பினால் அதற்கான விடை என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் . இத்தகைய சூழலில்தான் ஆங்கிலத்தில் வெளிவரும் தொழில்வணிக இதழ்கள் , துறை சார்ந்த இதழ்கள் நமது பார்வையில் பட்டு நம்மை வியப்படைய வைத்தன . அந்த இதழ்களில் வெளிவரும் செய்திகளும், விளம்பரங்களும் நேரடியாக வாசகர்களின் வளர்ச்சிக்கு பயன் படும் வகையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது. அதுவரை தேவி வார இதழில் சுமார் பத்தாண்டுகள் துணை ஆசிரியராக , அதுவும் மிகச்சிறந்த ஒரு பத்திரிகை ஆசிரியரான , ஆதித்தனாரின் மூத்த மகன் திரு. இராமச்சந்திர ஆதித்தனாரிடம் நேரடியாக பணிபுரியும் வாய்ப்போடு வளர்ந்த நிலையில் எண்ணத்தில் புதிய சிந்தனைகள் ஊற்றெடுக்க தொடங்கின .
ஏற்கெனவே தமிழர் வளர்ச்சி குறித்த நாட்டத்தோடு இருந்ததால் சிந்தனை அதை சுற்றி சுழன்றுகொண்டே இருக்கும் . எண்பதுகளில் சில கட்சிகள் மார்வாடிகளுக்கு எதிராக கொடி பிடித்ததையும் , அவர்களை வெளியேறச்சொல்லி முழக்கமிட்டதையும் மனது ஆராயும் . அந்த போராட்டங்களும், முழக்கங்களும் தமிழர் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயன்படாது என்பது புரியும் . மக்களின் வளர்ச்சி எப்போதுமே படிப்பையும், பணத்தையுமே அடிப்படையாக கொண்டு இருக்கிறது . தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வேண்டுமானால் அவர்களை வேலை பார்ப்பவர்கள் என்ற நிலையில் இருந்து வேலை கொடுப்பவர்கள் என்ற நிலையை அடைய செய்ய வேண்டும் . ஆம் , சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தும் ஆர்வத்தை தூண்ட வேண்டும் . எல்லோராலும் சொந்தமாக தொடங்க முடியாது என்பது உண்மையாக இருந்தாலும் தொழில்முனைவு தன்மை உள்ளவர்களை, முதலீட்டு வாய்ப்பு உள்ளவர்களையாவது இந்த திசை நோக்கி சிந்திக்க வைக்கலாமே என்ற நோக்கத்தால் தொடங்கப்பட்டதுதான் வளர்தொழில் .